உருகுலைந்துபோன உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்.!

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மிக பிரபலமான சரணாலயம். பசுமை அழகுடன் கூடிய ஆயிரக்கணக்கான மரங்கள், குவியும் பறவைகள் போன்றவற்றை பார்ப்பதற்கே பலர் இந்த சரணாலயத்திற்கு விரும்பி வருவார்கள்.

ஆனால், சமீபத்தில் வீசிய கஜா புயலினால் இந்த சரணாலயம் உருகுலைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து சேதமாகியுள்ளது. மேலும், முன்பு வருவதை போன்று பறவைகளும் இல்லாததால் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.