முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மதுபானம் விற்பனை மற்றும் கடத்தல் செய்தவர்கள் கைது.!

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் அனுமதியின்றி மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நித்தையன் மகன் ராஜேந்திரன்(28) மதுபானங்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டபோது பிடிபட்டார். ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தம்பிக்கோட்டை கிழக்காடு செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக திருத்துறைப்பூண்டியிலுருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற பைக்கை மடக்கி சோதனை செய்தபோது சரக்கு மூட்டையில் ஏராளமான பாண்டிச்சேரி மாநில மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட வாட்டாக்குடியை சேர்ந்த கோபால் மகன் ராஜதுரையை கைது செய்த போலீசார். அவரிடமிருந்து சுமார் 72 மதுபாட்டில்கள், கடத்த பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.