பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமாகா ஆர்ப்பாட்டம்.!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கிரோடு முக்கம் காந்தி சிலை அருகில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ ரங்கராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் நடராஜன், பட்டுக்கோட்டை நகர தலைவர் குமார், தஞ்சை மாநகர தலைவர் ராஜவேல் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.