முத்துப்பேட்டையில் பரவும் வதந்தி. பொதுமக்கள் நம்ப வேண்டாம்!

முத்துப்பேட்டையில் சில நாட்களாக பொதுமக்களிடையே ஒரு வதந்தி செய்தி வாட்ஸாப்ப் மூலம் அதிகமாக பரவி வருகிறது.

அந்த வாட்ஸாப்ப் குறுந்தகவலில், முத்துப்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த “லக்கி கேபிள் விஷன்” சமீபத்தில் வீசிய கஜா புயலின் பாதிப்புகளால் இனி இயங்காது. எனவே “லக்கி கேபிள் விஷன்” கேபிள் சேவையை பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாடியக்கையாளர்கள் “டிஷ் டிவி(DISH TV)” சேவைக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றும் பரப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல்.

இது தொடர்பாக “லக்கி கேபிள் விஷன்” உரிமையாளர் ஜெ. மைநூர்தீன் நம்மிடம் கூறுகையில், எங்கள் “லக்கி கேபிள் விஷன்” கேபிள் டிவி சேவை தொடர்ந்து இயங்கும். கஜா புயலின் பாதிப்புகளால் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை, தொடர்ந்து நாங்கள் துரிதமாக சரிசெய்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் எங்களின் கேபிள் டிவி சேவை எப்போதும் போல் சிறப்பாக இயங்கும். எனவே, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த வதந்தி செய்தியை யாரோ ஒரு சிலர் தங்களின் சுயலாபத்திற்காகவும், எங்களின் சேவையை முடக்கும் நோக்கத்திலும் பரப்புகிறார்கள். அவர்கள் யார் என்று விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.