முத்துப்பேட்டை வாரியர்ஸ் நண்பர்கள் சார்பாக நிவாரணம்…

முத்துப்பேட்டை வாரியர்ஸ் நண்பர்கள் சார்பாக நேற்று 50 குடும்பங்களுக்கு கஜா புயல் நிவாரணம் வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயல் பாதித்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இன்னும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மின் வினியோகம் பல பகுதிகளில் இல்லாததால் மக்கள் தீராத துயரத்தில் இருந்து வருகின்றனர்.

அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் முத்துப்பேட்டை வாரியர்ஸ் நண்பர்கள் சார்பாக 50 குடும்பங்களுக்கு தலா 500 வீதம் புதுமனை தெரு, கல்கேனி தெரு, திமிலத்தெரு, தெற்குதெரு, மரைக்காயர் தெரு மேலும் ஆலங்காடு மற்றும் மங்களூர் பகுதிகளில் அதிகம் பாதிப்பு அடைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

நிவாரணம் பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் தங்கள் நன்றிகளை அவர்களுக்கு தெரிவித்தனர்.