180 கிலோ கஞ்சா கடத்தலில் தேடப்பட்டவர் கைது.!

கடந்த அக்டோபர் 2ம் தேதி இரவு முத்துப்பேட்டை அடுத்த செங்காங்காடு கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடுத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை கடலோர காவல்படையினர் கடலோர பகுதியில் ஒட்டியுள்ள கந்தப்பரிசான் ஆறு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டபோது 180 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர்.

இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் செங்காங்காடு ராமு மகன் பாண்டியன் உட்பட சிலரை கடலோர காவல்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த செங்காங்காடு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில் செங்காங்காடு ராமு மகன் பாண்டியன்(37) என்றும், கடந்த அக்டோபர் 2ம் தேதி கஞ்சா கடத்தல் சம்பவத்தில் கடலோர போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.