குடிபோதையில் போலீஸ் வாகனத்தையே வழிமறித்து தகராறு செய்த வாலிபர்.!

முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் போலீஸ் வாகனம் ஒன்று திருவாரூரிலுந்து முத்துப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதனை திருவாரூர் ஆயுதப்படை போலீஸ்காரர் செந்தில்வேலன் ஓட்டிவந்தார்.

அப்போது அந்த வாகனத்தை தில்லைவிளாகம் தெற்குக்காட்டை சேர்ந்த வீரைய்யா மகன் மணிகண்டன்(30) என்பவர் குடிபோதையில் தகராறு செய்து மறித்தார். மேலும் வாகனத்தை ஒட்டி வந்த போலீஸ்காரர் செந்தில்வேலனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்வேலன் இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த எஸ்ஐ கணபதி தகராறு செய்த மணிகண்டனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.