கஜா புயலால் வீடை இழந்த ஏழ்மை குடும்பம். புது வீடு கட்டிக்கொடுத்த முத்துப்பேட்டை மற்றும் வெளியூர் நண்பர்கள்.!

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் தங்களின் வீடை இழந்த பரிதவித்து வந்தார் திருஞானம்(59). இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் செய்வதறியாது சாலையில் ஒரு ஓரத்தில் தங்கி வந்துள்ளார். இவர்களின், இந்த நிலையை கண்ட சிலர் இவர்களின் நிலையை வாட்ஸாப்ப் மூலம் தகவலை பகிர்ந்துள்ளார்கள்.

இந்த தகவலை கண்ட முத்துப்பேட்டையை சேர்ந்த இளைஞர்(சாஜித்) தனது தொண்டி நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தின் வீட்டை பார்வையிட சென்றள்ளனர். பின்னர், அவர்களின் அவல நிலையை கண்டு மிகவும் கவலை கொண்ட அவர்கள் “இந்த குடும்பத்திற்கு நாம் கண்டிப்பாக உதவி செய்தே ஆகவேண்டும்” என்ற நோக்கில் தங்களுடைய நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.

அதன்பின் முத்துப்பேட்டை, தொண்டி, கோவை, அறந்தாங்கி, பரங்கிப்பேட்டை, அய்யம்பேட்டை இளைஞர்கள் போன்றவர்கள் பலரின் பொருளாதார உதவியுடன் புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்தனர்.