நேற்றைய பதிவின் எதிரொலி – மாற்றப்பட்ட மின் கம்பங்கள்..!

முத்துப்பேட்டை புதுமனை தெருவில் சேதம் அடைந்த நிலையில் இருந்த மின் கம்பங்கள் இன்று மாற்றப்பட்டன.

நேற்றைய பதிவில் நாம் புயல் பாதித்த புதுமனை தெரு (திருமேனி காலணி) மின் கம்பங்கள் பற்றி பதிவிட்டு இருந்தோம். அந்த மின் கம்பங்கள் இன்று மாற்றப்பட்டு மின் வினியோகம் வழங்கப்பட்டது.

விரைவாக நடவடிக்கை எடுத்த மின் வாரிய ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.