முத்துப்பேட்டையில் சாலை விபத்தில் பெண் ஒருவர் பலி.!

முத்துப்பேட்டையில் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியானது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் வசிக்கும் “சகிலா பேகம்” மற்றும் இவரது கணவர் “சாதிக் பாட்சா” இருவரும் முத்துப்பேட்டையில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு(கிளி ஹாஜா வீடு, தெற்குத்தெரு) வந்துள்ளனர். பின்னர், தங்களின் உறவினர்களை பார்த்துவிட்டு மாலை 4 மணி அளவில் மீண்டும் பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.

அப்போது முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி அருகில் ரயில்வே கேட்டை கடக்கும் போது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பேருந்து கீழே விழுந்து கிடந்த சகிலா பானு மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சகிலா பேகம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது கணவர் சாதிக் பாட்சா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் இறந்த சகிலா பானு அவர்களின் உடல் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.