முத்துப்பேட்டையில் 4 கோரிக்கைகளை முன்வைத்து மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.!

முத்துப்பேட்டையில் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடந்தது.

கோரிக்கைகள்:

  • கஜா புயல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர வேண்டும்.
  • குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும்.
  • வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும்.
  • அனைத்து குடும்ப கார்டுகளுக்கும் அரசு அறிவித்த பொருட்கள் 27 முழுமையாக வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கை மனுக்களுடன் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.

பேச்சுவார்த்தை:

இந்த தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் சோமசுந்தரம், இன்ஸ்பெக்ட்டர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராம நிர்வாக அலுவலகம் முன் போராட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், கல்லுக்குடி ஊராட்சி அலுவலகம் முன் மாதர் சங்க நிர்வாகி தேவகி, குன்னலூர் கடை தெருவில் நிர்வாகிகள் வீரமணி, வாசுகி, இடும்பாவனம் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஒன்றிய குழு உறுப்பினர் வீரசேகரன், எடையூர் கடைத்தெருவில் நிர்வாகி தனவேந்தன், நாச்சிகுளம் கடைத்தெருவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஆலங்காடு கடைத்தெருவில் நிர்வாகி துரைராஜ், வந்தநகர் கிராம நிர்வாக அலுவலகம் முன் நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில் மொத்தத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.