முத்துப்பேட்டை அருகே மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் பலி.!

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி எக்கல் வினோபா கிராமத்தில் கஜா புயலால் பாதித்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கிரேன் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிக்கு மின்கம்பங்கள் எடுத்து செல்லப்பட்டது. அப்பொழுது கிரேனில் எடுத்து செல்லப்பட்ட மின் கம்பங்களுக்கு தாங்களாக மற்றொருபுறம் கோவை, திருமலைபாளையம், ஊமத்து நகரை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தாவூத் ராஜன் என்கிற டேவிட் (38) தாங்களாக நின்று சென்றுள்ளார். அப்போது கிரேன் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாங்களாக நின்ற டேவிட் நிலைதடுமாறி கிழே விழுந்தார். அப்போது கிரேனின் சக்கரம் டேவிட் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் உடல் நசுங்கி பரிதமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எடையூர் போலீசார் டேவிட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.