முத்துப்பேட்டையில் ரயில்வே துறையின் சீரமைப்பு பணி.!

கடந்த டிசம்பர் 27ம் ரயில்வே துறையின் அலட்சியத்தால் பெண் ஒருவர் விபத்தில் பலியானது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.

அப்போது விபத்தில் பலியான அந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இந்த விபத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போல் இனி விபத்துகள் நடக்காமல் இருக்க பள்ளம் மேடாக இருக்கும் பகுதிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து இன்று பிரில்லியண்ட் பள்ளி அருகாமையில் இருக்கும் செம்படவன்காடு கிராஸ்ஸிங் பகுதி சீரமைப்பு செய்யப்பட்டது.