முத்துப்பேட்டையில் பிஜேபியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

முத்துப்பேட்டை அரசு மருத்துவரை தாக்கிய வழக்கில் பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(30), பாலா என்கிற பிரபாகர்(21) ஆகிய இருவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.

மேலும், இதே வழக்கில் தேடப்பட்டுவந்த திருவாரூர் பிஜேபி மாவட்ட தலைவர் பேட்டை சிவாவை நேற்று முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்கண்ணன், பேட்டை சிவாவை 11ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த கைதை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் பிஜேபியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிஜேபி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.