என் கணவர் சாவுக்கு இந்த மருத்துவமனை தான் காரணம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார்.!

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கிழக்காடு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 26ம் தேதி தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அழகிரி(47) உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியில் அழகிரி இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் இறந்தார் எனக்கூறி மருத்துவமனையை சூறையாடினர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் அழகிரியின் மனைவி ராஜேஸ்வரி, என் கணவர் சாவுக்கு தம்பிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை தான் பொறுப்பு. எனவே, அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.