விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்கள்…

முத்துப்பேட்டை பகுதிகளில் பழைய மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பாடாமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கிடக்கிறது.

முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. புதிய மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மாற்றும் பணி முடிந்து மின் வினியோகம் முத்துப்பேட்டை நகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து நீக்கப்பட்ட பழைய மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் அப்புறப்படுத்தப்படாமல் சாலைகளில் அப்படியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூராக இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் சாலை விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே விரைந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது.