முத்துப்பேட்டை கோரை ஆற்றில் தடுப்பணை கட்டகோரி மஜக சார்பில் மனு.!

முத்துப்பேட்டையில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு, நிலத்தடி நீர் உப்புநீராகவும் மாறி வருகிறது. இதனால் முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.

எனவே கடல்நீர் உட்புகுவதை தடுத்து, நிலத்தடி நீரை பாதுகாக்க கோரை ஆற்றில் தடுப்பணை கட்ட கோரி மஜக ஒன்றிய செயலாளர் முகமது மைதீன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. உடன் நகர பொருளாளர் பசீர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன், நிலத்தடி நீர் பாதுகாப்புகுழு ஒருங்கினைப்பாளர் கருத்தப்பா சித்திக், அன்வர் பாட்ஷா, சேக் அலாவுதீன் ஆகியோர் இருந்தனர்.