அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் விபத்து.!

அதிராம்பட்டினம் அடுத்த தொக்காளிக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல்(23) மற்றும் வினோத்(18) ஆகிய இருவரும் இன்று(10/01/2019) இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க சென்றுள்ளனர்.

படம் பார்த்துவிட்டு அதிவேகத்தில் அதிரை நோக்கி வந்தவர்கள், அதிரை ஷீபா மருத்துவமனைக்கு அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தினால் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்த மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்திற்குள்ளான இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.