முத்துப்பேட்டையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.!

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கனவு கலாம் இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்த விழா கௌரவ ஆலோசகர் அரசு மருத்துவர் சையத் அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது.

இயக்கத்தின் ஆலோசகர்களான சமூக ஆர்வலர் முகமது மாலிக், மெட்ரோ மாலிக், ஆசிரியர் செல்வசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியர் நித்தியன் வரவேற்று பேசினார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சமத்துவ பொங்கலை துவக்கி வைத்து பேசினார். இதில் பள்ளியில் உள்ள ஆசிரியைகள் மாணவிகளால் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

அதனைதொடர்ந்து மாணவ மாணவிகளின் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மாணிக்கம், மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் இபுராஹீம், வர்த்தகக் கழக பொதுச்செயலாளர் ராஜாராமன், அமமுக நகர பொருளாளர் அயூப்கான், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் இசாக், திமுக நிர்வாகி நிசார் அகமது, ஆசிரியர்கள், கலாம் கனவு இயக்கத்தின் செயலாளர் ஹாஜா, பொருளாளர் கிஷோர், துணைத்தலைவர் பாலாஜி, துணைச்செயலாளர் விவேக், ஆலோசகர் மருதம் செல்வம், செய்தி தொடர்பு சபான் மரைக்காயர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் திட்ட இயக்குநர் பாயிஸ் நன்றி கூறினார்.

படங்கள்: