முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் நிகழ்ச்சி …

முத்துப்பேட்டை அடுத்த எக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் பரிமாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

எக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமனி அரசு பள்ளி மாணவ மாணவிகள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் முருக பாஸ்கர் மற்றும் வட்டார மேற்பார்வையாளர் முத்தண்ணா மற்றும் தலையாசிரியர் தலைமையேற்று நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொறுப்பு வகிப்பவர்கள் உடன் இருந்தனர், மேலும் மாணவர்களிடையே தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.