முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் பர்ச்சேஸ்…

முத்துப்பேட்டையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம். மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு.

முத்துப்பேட்டை சுற்று வட்டார மக்கள் பண்டிகை காலங்களில் தேவையான பொருட்கள் வாங்க முத்துப்பேட்டைக்கு வருவது வழக்கம். நாளை பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் மக்கள் கூட்டம் முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் நிரம்பி வழிகிறது. கரும்பு மற்றும் பொங்கல் வைக்க தேவையான மண் பானைகள் அதிக அளவில் முத்துப்பேட்டை பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் மன்னார்குடி சாலை உள்ளே பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகளை போட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.