சாலை மறியல் போராட்டம் நிறைவு. தாசில்தாரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

நிவாரண பொருட்கள் வழங்குவதில் மோசடி செய்தததை கண்டித்தும், முத்துப்பேட்டை 1 முதல் 18 வார்டு மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து வார்டு பொதுமக்கள், ஜமாத்தார்கள், இயக்கங்கள் மற்றும் நீர் நிலை பாதிப்புக்குழுவினர் கலந்து கொண்ட இந்த சாலை மறியல் போராட்டம் முத்துப்பேட்டை ECR பகுதியில் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 2 வரை நீடித்தது.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், தாசில்தார் வராமல் இந்த போராட்டம் நிறைவடையாது என்று போராட்டக்காரர்கள் உறுதியாய் நின்றனர்.

தாசில்தாரிடம் கோரிக்கை மனு:

போராட்டத்தின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், தாசில்தார் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது பொதுமக்கள் “அனைவருக்கும் பாகுபாடின்றி உரிய முறையில் புயல் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்” என்ற தங்களின் கோரிக்கையை மனுவாக தாசில்தாரிடம் கொடுத்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட தாசில்தார், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக ஒரு 5 நபர்கள் மட்டும் வருகின்ற திங்கள்கிழமை கலெக்டர் அலுவகத்திற்கு வரும்படியும் கூறினார். இதனையடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.

மீண்டும் போராட்டம் தொடங்கும்:

இந்த நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பாக வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லையென்றால், இதைவிட பெரும் திரள் கூட்டத்துடன் மிக பெரிய அளவில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும் எனவும் முத்துப்பேட்டை பொதுமக்கள், ஜமாத்தார்கள், இயக்கங்கள் மற்றும் நீர் நிலை பாதிப்புக்குழுவினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.