முத்துப்பேட்டையில் உயிர் காக்கும் சேவை தொடக்கம்…

முத்துப்பேட்டையில் பேர்ல்பெட் ( Pearlpet) உதவும் கரங்கள் எனும் உயிர் காக்கும் இரத்த தான சேவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை பகுதியில் மக்களின் தீராத பிரச்சினைகளில் ஒன்று இரத்தம் சரியான நேரத்தில் கிடைக்க பெறுவதில்லை. விபத்துக்குள்ளாகி இரத்தம் அதிகம் வெளியேறிவர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவை உள்ளவர்களுக்கும் சரியான நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற வகையில் இரத்தம் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை நண்பர்களால் Pearlpet helping hand என்ற இரத்த தான சேவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கான தொடர்பு கொள்ள எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை மக்கள் அவசர காலங்களில் இரத்த தேவை இருப்பின் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு..

◾94882 69806

◾95787 19678

◾63806 22895

மின் அஞ்சல் முகவரி..

[email protected]