நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க தொடங்கிய பணிகள்…

முத்துப்பேட்டையில் சென்ற வருடம் மழையின் அளவு குறைவாகவே பதிவானதால் நிலத்தடி நீரை சேமிக்க பட்டறை குளத்தில் ஆற்றுநீர் நிரப்பப்பட்டு வருகிறது.

முத்துப்பேட்டையில் சென்ற வருடம் நிலத்தடி நீர் குறைந்து அதன் காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கஜா புயலுக்கு பின்னர் எராலமான குளங்கள் மற்றும் ஆறுகள் நிறைந்தது. தற்போது தொடர்ந்து மழை இல்லா நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் முத்துப்பேட்டை புதுப்பள்ளி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டறை குளத்தில் பம்பு செட் உதவியுடன் அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் இறைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த துரித நடவடிக்கை பற்றி புதுப்பள்ளி நிர்வாகம் கூறுகையில் ஆற்றில் உப்பு நீர் ஏறுவதற்கு முன்னரே இந்த நடவடிக்கை விரைவாக எடுக்கப்படுகிறது. இதனால் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும், என்று கூறினர்.

இதுபோன்ற துரித நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களின் இன்னல்களை போக்கும். இந்த துரித சேவை மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.