பிளாஸ்டிக் பாட்டிலை முற்றிலும் ஒழிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் வழங்கிய இளைஞர்கள்.!

தமிழகத்தில் முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தால் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. இருப்பிலினும் பிளாஸ்டிக் மாற்றாக சில தொழில்கள் மாற்று பொருளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மக்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், முத்துப்பேட்டை அடுத்த உப்புர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை அகிலா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியை ராசகுமாரன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்தும் அவைகளை எப்படி நாம் முற்றிலும் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சோமசுந்தரம், வெற்றிவேந்தன், பிரபாகரன், அசோக்குமார், கண்ணதாசன், சதிஷ் குமார், ரகுராம், ராஜேஷ், சர்குணன் ஆகியோர் இணைத்து பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் 55 பேருக்கும் எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர். அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட மாணவர்கள், “பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று உறுதிமொழி எடுத்தனர்.