இருளில் தவிக்கும் தெருக்கள்…

முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு பின் இதுவரை தெரு விளக்குகள் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.

கஜா புயலில் சிக்கி ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. அதனை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மின் விநியோகம் இருந்தும் முத்துப்பேட்டையில் அதிகமான தெருக்கங்கள் மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் இன்னும் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பயணம் செய்வோர் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே சில திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சேதமடைந்து நீக்கப்பட்ட மின் கம்பங்கள் அப்படியே சாலைகளில் கிடப்பதால் அவைகள் சாலை விபத்துக்கு வழி வகுக்கிறது.

மேலும் சுற்றி திரியும் நாய்கள் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக முத்துப்பேட்டை மக்கள் இரவு நேரங்களில் அதிகம் வெளியில் செல்வது இல்லை.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் மின் விளக்குகள் விரைவாக அமைக்க வேண்டும் என்பது முத்துப்பேட்டை தெருவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.