வாக்குச் சாவடிகளில் திடீர் ஆய்வு…

முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

முத்துப்பேட்டை அடுத்து உள்ள பின்னத்தூர், ஆட்காட்டிவெளி, பாண்டி ஆகிய இடங்களிலுள்ள வாக்குச் சாவடிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தேர்தல் நேரங்களில் வாக்குச் சாவடிகளாகவும், பிற நேரங்களில் பள்ளிக்கூடமாகவும் இயங்கிவரும் பள்ளிக் கட்டிடத்தின் தரத்தையும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.

அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏற்றதாக சாய்தள பாதை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ் குமார் , முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி , வருவாய்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் இருந்தனர்.