பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்…

முத்துப்பேட்டையில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தி – இந்து – இந்துஸ்தான் என்று ஒற்றை நாடு, ஒரே மொழி என்ற கொள்கை வேரூண்டத் தொடங்கிய நாளில் தமிழுக்கென தனிச்சிறப்புமிக்க இடத்தை வாங்கிக் கொடுத்து தமிழ் நெஞ்சங்களில் எங்கும் நீங்காத புகழ் படைத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா.

முத்துப்பேட்டை நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 50 வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் நகர தலைவர் இராமஜெயம் அவர்களின் தலைமையில் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் M.S கார்த்திக் அவர்கள், நகர செயலாளர் ஜெ.நவாஸ்கான், நகர துணை செயலாளர் சிவ.அய்யப்பன் மற்றும் நகர பொருளாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பல்வேறு அமைப்பு மற்றும் கட்சியை சேர்ந்தவர் உடன் இருந்து அண்ணா அவர்களின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.