முத்துப்பேட்டையில் பயங்கர சாலை விபத்து.!

சேதுபாவசத்திரத்தை சேர்ந்த ராசாத்தி(35) மற்றும் இவரது கணவர் பக்கிரி முகமது மற்றும் இவர்களது 2 குழந்தைகளை டவேரா வாகனத்தில் நாகூர் சென்றுள்ளார்.

நாகூர் சென்றுவிட்டு மாலை 4.30 மணிக்கு சேதுபாவாசத்திரம் திரும்புகையில் முத்துப்பேட்டை மன்னார்குடி பைபாஸ் சாலையில் (ரவுண்டானம் அருகில்) இவர்கள் வந்த டவேரா வாகனம் தீடிரென்று எதிரே வந்த டெம்போ மற்றும் காரில் மோதி நிலைதடுமாறி வண்டி தலைகீழாக புரண்டது.

இந்த விபத்தில் டவேரா ஓட்டுனருக்கு பலத்த காயத்துடனும், இதே வாகனத்தில் பயணித்த ராசாத்தி, பக்கிரி முகமது மற்றும் இவர்களது 2 குழந்தைகள் உள்காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், இந்த டவேரா வாகனம் மோதியதில் டெம்போ ஓட்டுனருக்கு காலில் பலத்த அடி.

இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கிடந்த டவேரா ஓட்டுனரை, டெம்போ ஓட்டுநர் மற்றும் உடனிருந்தவர்கள் கடுமையாக அடித்தாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் சமாதானப்படுத்தி, விபத்தினால் காயமடைந்தவர்களை 108 அரசு ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய டெம்போ
விபத்தில் சிக்கிய மற்றொரு கார்
விபத்தில் சிக்கிய டவேரா கார்