முத்துப்பேட்டையில் பெயரளவில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…

முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும், என்று மஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டையில் பெயரளவில் மட்டும் மருத்துவமனையாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆபத்து காலங்களில் இங்கே கொண்டுவரப்படும் நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி மட்டும் பார்க்கப்படும் அவலம் தொடர்கதையாக இருந்து வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை. அதன் காரணமாக இரவு நேரங்களில் மேல் சிகிச்சைக்காக அதாவது சாதாரண தையல் போடுவதற்கு கூட திருத்துறைப்பூண்டி அல்லது திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அவலம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் இரவு நேரங்களில் திடீர் உடல்நல குறைவு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது,

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் குவிய தொடங்கியுள்ள சூழலில் முத்துப்பேட்டை மஜக சார்பில் 24 மணிநேரமும் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து போஸ்டர்கள் முத்துப்பேட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.