அரசு மருத்துவரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது.!

கடந்த 29ம் தேதி முத்துப்பேட்டை பேட்டை பகுதியில் சுகாதாரத்துறை சார்பாக மலேரியா நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மாத்திரையை சாப்பிட்டவர்களுக்கு லேசான தலைசுற்று ஏற்பட்டது. மேலும், பேட்டை பகுதியை சேர்ந்த கீர்த்தனா(20), அகிலா(32), சஞ்சய்(12), விகாஷ்(6), நித்திஷ்(6), கணேஷ்(8) ஆகியோருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அனைவரும் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், அரசு முத்துப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்தனிடம் பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா மற்றும் சிலர் சிகிச்சைகள் குறித்து கேட்டபோது, மருத்துவர் சரிவர பதில் தராததால் தாக்கப்பட்டார்.

முன்னர் நடந்த சம்பவம் – “முத்துப்பேட்டை அரசு மருத்துவரை தாக்கிய இருவர் கைது. பாஜக பிரமுகர் உட்பட மூவருக்கு வலைவீச்சு.”

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா, முருகானந்தம்(30), பிரபாகர்(21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பேட்டை தட்டார தெருவை சேர்ந்த கார்மேகம் மகன் முருகன்(32), கோபால் மகன் திருநாவுக்கரசு(35) ஆகிய 2 பேரை தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முருகன், திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் நேற்று முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான அவர்களது வீட்டில் வைத்து செய்து விசாரனைக்கு பின்னர் இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.