மதுக்கூரில் வாடகை வண்டிகள் இயங்காது…

முத்துப்பேட்டை அடுத்த மதுக்கூரில் வாடகை கார், வேன் மற்றும் சுமோ ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம்.

மதுக்கூரில் வாடகை கார், வேன் மற்றும் சுமோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் அதிகார வர்க்கதினரின் வரம்பு மீறும் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதன் காரணமாக மதுக்கூர் பகுதிகளில் இன்று வாடகை வாகனங்கள் இயங்காது என வாடகை கார், வேன் மற்றும் சுமோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.