முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வருகின்ற (22/04/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் சிறுபாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல எழுத்தாளர் வே.மதிமாறன், விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.ஷரீபு, அகில இந்திய முஸ்லி தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர் பாத்திமா முஸப்பர், காம்யிதேமில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியாகான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அணைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.