நிவாரண பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பு. பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு.!

அதிராம்பட்டினத்தில் நிவாரண பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பு செய்த அதிகாரிகளை கண்டித்து மற்றும் உரிய முறையில் அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் அதிரை ECR பகுதியில் நடைபெற்றது.

இந்த போராட்டம் சரியாக 4 மணிக்கு துவங்கி 7 மணிவரை நீடித்தது. பின்னர், 2 நாட்களுக்குள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறையினரின் சமாதானத்தில் முடிவு பெற்றது.

சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.