கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த இளைஞர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நான்கு மாவட்ட நிர்வாகங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

இந்த முகாமானது கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த இளைஞர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் நடத்தப்படும் ஒன்று.

எப்போது? எங்கே?

நாள்: 09.02.2019, சனிக்கிழமை.
நேரம்: காலை 8.30 மணி முதல் 3.00 மணி வரை.
இடம்: மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சாவூர் (புதிய பேருந்து நிலையம் அருகில்)

கல்வித்தகுதி:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
  • எஸ்.எஸ்.எல்.சி / + 2
  • ஐ.டி.ஐ / டிப்ளமோ
  • பட்டப்படிப்பு / பி.இ / எம்.பி.ஏ
  • ஆசிரியர்கள் / செவிலியர் / பார்மசிஸ்ட்

படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

சிறப்பம்சங்கள்:

  • 100க்கும் மேற்ப்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்
  • 10000க்கும் மேற்ப்பட்ட பணிக்காலியிடங்கள் தேர்வு செய்ய உள்ளனர்
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு
  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான OMCL  பதிவு வழிகாட்டுதல்
  • மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பிற்கான சிறப்பு அரங்கு
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்குதல்
  • தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது
  • முகாம் அனுமதி முற்றிலும் இலவசம்

குறிப்பு:

18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு(BIO DATA), கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.