சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி…

முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே குறைந்து கொண்டே வருகிறது. முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி எடையூர் பகுதியில் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இனிக்கோதிவ்யன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை குறித்தும் பேசினார்.

தொடர்ந்து அப்பகுதியில் வாகன முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.