விபத்து ஏற்பட்டால் தான் தீர்வு கிடைக்குமா.?? பொதுமக்கள் காட்டம்…

முத்துப்பேட்டை 6 வது வார்டு புதுத்தெரு பகுதியில் அறுந்து நுனியலவில் நிற்கும் மின் கம்பியால் பொதுமக்கள் அச்சம்.

முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு ஏராளமான மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் கடுமையாக சேதம் அடைந்தன. இதனை அடுத்து பெரும்பாலான தெரு பகுதிகளில் புதிய மின் கம்பங்கள் மற்றும் அதற்கான மின் கம்பிகள் மாற்றப்பட்டன. இந்நிலையில் புதுதெரு (OPM சந்து) TNTJ மதரஸா அருகில் உள்ள மின் கம்பத்தில் ஒரு மின் கம்பி மட்டும் அறுந்து நுனியலவில் எப்போது அறுந்து விழும் என்று தெரியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.

அப்பகுதியில் சிறுவர்களுக்கான மதரஸா இயங்கி வருகிறது. தினந்தோறும் அந்த மதரஸாவில் சிறுவர்கள் பாடம் கற்று வருகின்றனர். மேலும், அருகாமையில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. எப்போது அறுந்து விழும் என்ற அச்சத்தோடு இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முத்துப்பேட்டையில் பெரும்பாலான விபத்துகள் இதுபோன்ற அலட்சியத்தால் தான் அரங்கேறியுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.