முத்துப்பேட்டையில் மமகவின் 11வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்.!

முத்துப்பேட்டையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி (மமக)வின் 11வது ஆண்டு துவக்க விழா ஆசாத் நகரில் நடைபெற்றது. இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முஹம்மது மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்த துவக்க விழாவில் ஏராளமான பொதுமக்கள் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படங்கள்: