முத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து.

முத்துப்பேட்டை அருகே கடல் உணவுகளை ஏற்றி செல்லும் டிரக் மஞ்சவயல் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மோதி பயங்கர விபத்து.

கடற்கரை பகுதிகளில் இருந்து தினமும் கடல் உணவுகளை ஏற்றி செல்லக்கூடிய நிலா சீ புட் டிரக் இன்று காலை 7 மணியளவில் முத்துப்பேட்டை அருகே அதிராம்பட்டினம் செல்லும் வழியில் உள்ள மஞ்சவயல் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

வாகனத்தின் முன் பகுதி கடுமையான சேதம் அடைந்தது. கனரக வாகனம் என்பதால் அப்பகுதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.