புயல் நிவாரண தொகை வங்கி கணக்கில் ஏறாததால் VAO மீது தாக்கு…

முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் பகுதியில் புயல் நிவாரணப் பணம் வங்கி கணக்கில் வரவு ஆகாததால் கோபத்தில் விஏஓ மீது தாக்கு.

இடும்பாவனம் மேல வாடியக்காடு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (55) என்பவருடைய வங்கி கணக்கில் கஜா புயல் நிவாரண தொகை வரவு ஆகாத காரணத்தால் தொடர்ந்து அவர் அப்பகுதி விஏஓ சரவணனை சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுபாஸ் சந்திரபோஸ் நேற்று வழக்கம் போல் சென்று விஏஓ சரவணனிடம் நிவாரண தொகை பற்றி கேட்டுள்ளார். அதற்கு விஏஓ சரவணன் நீங்கள் ஏற்கனவே கொடுத்த வங்கி கணக்கு எண் ஏற்றுக்கொள்ளவில்லை வேறொரு வங்கி கணக்கு எண் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சுபாஸ் சந்திர போஸ் விஏஓ சரவணனை கையால் தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சரவணன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சுபாஸ் சந்திரபோஸை தேடி வருகின்றனர்.