வேலையில்லா இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…

முத்துப்பேட்டை கல்வி பேரவை மற்றும் சென்னை கேலக்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (Galaxy Institute of Management) இணைந்து வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடத்த இருக்கின்றனர்.

முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அதிராம்பட்டினம், மதுக்கூர், நாச்சிகுளம், துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து இளைஞர்களுக்காகவும் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற்று தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு ஏற்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை அமைத்து கொள்ளலாம்.

இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, Degree முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆறு மாதகாலம் மத்திய அரசின் திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிறப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை அமைத்து தருகின்றனர்.

இதற்கான பயிற்சி, உணவு, தங்குமிடம், கட்டணமின்றி சேவைநோக்கில் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், நேர்காணல் மூலம் சர்வதேச நிறுவனங்களில் உங்களுக்காக வேலைகள் ஏற்பாடு செய்து தருகிறது. வெளிநாட்டு செல்வதற்கான சட்டபூர்வ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: 9488384900