பட்டப்பகலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!

முத்துப்பேட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற பகுதி மாணவ, மாணவிகள் அதிகம் பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அரங்கேறியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள்
வலுக்கட்டாயமாக அந்த மாணவியை வயல் காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளனர். மாணவி அச்சத்தில் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் மாணவியை விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் காயம் அடைந்த மாணவியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பந்தபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.