மல்லிப்பட்டினத்தில் தீ விபத்து…

முத்துப்பேட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தில் திடீர் தீ விபத்தில் சிக்கி குடிசை நாசம்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இன்று தன்னுடைய குடிசையில் உணவு சமைத்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதால் குடிசை முழுவதும் எரிந்து நாசம் ஆனது.

இதில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் சில ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. குடிசை வீட்டில் உள்ளே ஆட்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், சில தனியார் வாட்டர் சப்ளை வண்டிகள் உதவியுடன் தீ பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் மல்லிப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.