தனியார் பேருந்து பூ கடையில் மோதியதால் பரபரப்பு..

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து பூ கடையில் மோதியதால் பரபரப்பு.

நேற்று வழக்கம் போல் 7.30 மணி டிரிப் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுகோட்டைக்கு செல்வதற்காக தனியார் பேருந்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் பேருந்தை வளைக்கும் போது எம்ஜிஆர் சிலை அருகே உள்ள பூ கடையில் பேருந்தின் இடது பகுதி மோதியது.

இதனால் கடையின் மேற்பகுதி மற்றும் மேஜை சரிந்து கீழே விழுந்தது. இதனை அடுத்து பூ கடைக்காரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேருந்து ஓட்டுனரை பிடித்து லைசென்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதனால் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.