முத்துப்பேட்டை அருகே நூதன போராட்டம்…

முத்துப்பேட்டை அருகே உப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படாத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன போராட்டம்.

கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் உப்பூர் பகுதியும் ஒன்று. இப்பகுதியில் இன்னும் சரிசெய்யப்படமால் ஏராளமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புயலில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பழுதடைந்த மின் விளக்குகளை சரிசெய்ய கோரியும், முறையாக குடிநீர் விநியோகம் வழங்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இன்று சாலையில் சடங்கு செய்யும் நூதன போராட்டத்தை உப்பூர் கிராம மக்கள் நடத்தினர்.

இந்த நூதன போராட்டம் CPM ஒன்றிய குழு N.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் உப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது.