இறந்து விட்டாதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக பிரமுகர் நீக்கம்…

முத்துப்பேட்டையில் இறந்து விட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக பிரமுகர் பெயர் நீக்கப்பட்டதால் சர்ச்சை.

முத்துப்பேட்டை ஆரியலூர் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் திமுக வின் ஒன்றிய துணை செயலாளர் ஆவார். இவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து உள்ளார். நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு அவரின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் இதைப்பற்றி வாக்குச்சாவடி மைய அதிகாரிகளிடம் விசாரித்த போது, அவர் இறந்து விட்டதாக கூறி அவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியன் மற்றும் அப்பகுதி திமுக உறுப்பினர்கள் தாசில்தார் மற்றும் VAO ஆகியோரிடம் முறையிட்டனர். தான் உயிருடன் இருக்கும் போது எப்படி என் பெயர் இறந்ததாக கூறி நீக்கப்பட்டது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மேலும், இதே போல் திமுக-வை சேர்ந்த 10 உறுப்பினர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாலசுப்ரமணியன் வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார். திமுக சேர்ந்த உறுப்பினர்கள் பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து வேண்டும் என்றே நீக்கப்பட்டிருப்பதாக பாலசுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.