ரூ. 2 ஆயிரம் வழங்க கணக்கெடுப்பு…

முத்துப்பேட்டையில் தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

முத்துப்பேட்டையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் நேரடியா வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்பட்டு நடந்து வருவதால் யாரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு அலைய வேண்டாம், என்று பேரூராட்சி அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு பணிக்காக பேரூராட்சி சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் வருவார்கள் என்று பேரூராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.