திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் வரை நடைபயண பேரணி…

முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை முக்கிய பிரச்சனைகள் குறித்து கலந்து விவாதிக்கப்பட்டது.

இதில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,மேலும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக அவரவர் வங்கி கணக்குகளில் நிவாரண தொகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் இயற்றப்பட்டது.

இதற்கான போராட்டமாக முத்துப்பேட்டைலிருந்து திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் வரை 26 கிலோமீட்டர் நடை பயண பேரணி நடத்த போவதாக தீர்மான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.