ஆ.நே பள்ளியில் மஜக சார்பில் நிகழ்ச்சி…

முத்துப்பேட்டை ஆ.நே. உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை ஆ.நெ. உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் முகமதுமைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர்சாதிக் அவர்கள் மாணவ,மாணவியருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நகரபொருளாளர் பசீர்அலி, பஹ்ரைன் மண்டல ஆலோசகர் ஜான்முகமது, துபாய் மண்டல செயற்குழு உறுப்பினர் ஆசிக், வேதை ஒன்றிய செயலாளர் அப்துல் சலீம், துளசியாப்பட்டிணம் கிளை செயலாளர் இபுறாமூஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பள்ளியின் தாளாளர் சேக் அப்துல் காதர், அதிமுக நகரதுணை செயலாளர் லக்கி மைநூர்தீன், அமமுக நகர செயலாளர் லக்கிநாசர், திமுக மாவட்ட பிரதிநிதி PSM இபுறாஹிம், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜபருல்லா,முஸ்லீம் லீக் ஒன்றிய செயலாளர் கமாலுதீன் பைஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஞானசேகரன், நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பா சித்திக், 9 வது வார்டு EX கவுன்சிலர் பாவாபகுருதீன், காங்கிரஸ் ஹனிபா, மற்றும் மஜக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.