கஜா புயலால் பாதித்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் தீவிரம்…

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கஜா புயலால் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகவும் சேதமடைந்த இருபது வீடுகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 18 வீடுகள் இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் புனரமைக்கும் பணி முத்துப்பேட்டை மஜீதியா தெருவில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணியினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் மர்சூக் அகமது அவர்களின் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.